கணினியியல் பயன்படுத்தும் பல்வேறு பைல் பார்மேட்களின் விவரம்

கணினியியல் பயன்படுத்தும் பல்வேறு பைல் பார்மேட்களின் விவரம்

Default Image
பைலினுள் தகவல் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதே பைல் பார்மேட் ஆகும். நாம் பயன்படுத்தும் மென்பொருள் தகவல்களை புரிந்து கொண்டு சரியான முறையில் இயக்க வேண்டும். வெவ்வேறு வகையான பைல் பார்பமேட்கள் உள்ளன, இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது .doc, .mp3, .pdf ஆகும்.


JPG:

கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும் பார்மேட்களில் இதுவும் ஒன்று. இந்த பார்மேட் புகைப்படங்களை 16 மில்லியன் அளவு வெவ்வேறு ஹியூஸ்களை பயன்படுத்தி அவற்றை கம்ப்ரெஸ் செய்கிறது. இந்த பார்மேட் புகைப்படங்களுக்கு மென்மையான தோற்றத்தை டோன் மற்றும் கலர் மூலம் வித்திாசப்படுத்துகிறது.

GIF:

வெப் கிராபிக்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பார்மேட்டாக இது இருக்கிறது. இது அனிமேஷன் ஜிஃப்களை கொண்டுள்ள பார்மேட் ஆகும். மேலும் இது பிக்சல் சார்ந்த பார்மேட்களை கொண்டு அனிமேஷனை இயக்குகிறது.

PNG:

இது முந்தைய பார்மேட்களுக்கு மாற்றானது. பொதுவாக புகைப்படங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பார்மேட் பயன்படுத்த எவ்வித அனுமதியும் தேவையில்லை. இது டெஃப்லேஷன் எனும் லோஸ்லெஸ் முறையில் தகவல்களை கம்ப்ரெஸ் செய்கிறது. JPG-உடன் ஒப்பிடம் போது PNG தகவல்களை சேமித்து வைக்க அதிக பயனுள்ளதாக இருக்கிறது.

MP3:

MP3 என்பது சவுண்ட்களை கம்ப்ரெஸ் செய்யும் வழக்கமான வழிமுறை ஆகும். இதில் சத்தத்தின் தரத்தை குறைக்காமல் அதன் அளவை குறைக்க முடியும். இது அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் பார்மேட்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

MP4:

இந்த பார்மேட் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. இது கன்டெயினர் பார்மேட் என்பதால் இதை கோடிங் செய்ய எவ்வித வழிமுறையும் இல்லை. மாறாக ஆடியோ அல்லது வீடியோ எவ்வாறு கோட் செய்யப்பட்டு கம்ப்ரெஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கோடெக்ஸ் முடிவு செய்யும்.

PDF:

போர்ட்டபிள் டாக்குமென்ட் பார்மேட் என அழைக்கப்படும் இந்த பார்மேட் பிரின்ட் செய்யப்பட வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் புகைப்படத்தை பார்த்து, பிரின்ட் செய்வதோடு மேலும் பலவற்றை செய்திட முடியும். இந்த பார்மேட்டினை நாளிதழ் மற்றும் விளம்பர தகவல்களுக்கு பயன்படுத்தலாம்.

DOC:

இது மைக்ரோசார்ட் வொர்டு பைல் ஆகும். இந்த பார்மேட் டெக்ஸ்ட், புகைப்படம், டேபிள், கிராஃப், சார்ட், பேஜ் பார்மேட்டிங் மற்றும் பிரின்ட் செட்டிங்ஸ்களை கொண்டுள்ளது.
Join our channel google news Youtube