ரஜினி அரசியல் வருகை குறித்து அதிரடி கருத்து தெரிவித்த ஷாருக்கான்….!…பரபரப்பு…..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உலக அளவில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பவர். பல வருடங்களாக இவர் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போதிலும், அவர் ஒரு சில காரணங்களால் அரசியலை விட்டு விலகியே இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர் போருக்கு தயாராகுங்கள் என தன்னுடைய அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசினார். இதன் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வரப்போவது உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஷாருகான் ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்பது ஒரு அபாரமான முடிவு என்றும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, மாநிலத்திற்கோ தன்னலமற்ற தொண்டு செய்பவர் மட்டுமே அரசியலுக்கு வருவது பொருத்தமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். ஷாருகான் தெளிவாக இந்த பதிலை சொன்னாலும் பலரை குழம்ப வைத்துள்ளது அவரது இந்த அதிரடி கருத்து என்று சொல்லலாம்.

Leave a Comment