சாய் பல்லவி கண்ணத்தில் உள்ளது செயற்கை பருக்களா…? பிதியை கிளப்பிய ரசிகர்…!

சாய் பல்லவி கண்ணத்தில் உள்ளது செயற்கை பருக்களா…? பிதியை கிளப்பிய ரசிகர்…!

Default Image

‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அவரை தமிழில் நடிக்க கேட்டு மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள் அணுகினர். வெவ்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. தற்போது விஜய் இயக்கும் ‘கரு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தில் நடித்து வந்தார் சாய் பல்லவி. சேகர் கம்முலா இயக்குகிறார். ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி நடித்தபோது அவரது முகத்தில் பருக்கள் இருந்தன.

அதுதான் அவரது கவர்ச்சி எனக் கூறி பருக்களை மறைக்காமல் நடிக்க வைத்தார் இயக்குனர். ரசிகர்களுக்கும் அவரது முகப்பரு தோற்றம் பிடித்திருந்தது. சாய் பல்லவி நடித்த ‘ஃபிடா’ தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னதாக இப்பட புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற சாய் பல்லவியின் கன்னத்தில் ஒரு பரு கூட இல்லாமல் பளிச்சிட்டது. ஆனால் படத்தில் சாய் பல்லவி கன்னங்களில் முகப்பரு தோற்றத்துடன் காணப்படுகிறார். இது ரசிகர்களிடம் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவியின் கன்னம் முகப்பரு எதுவும் இல்லாமல் மொழு மொழுவென பளிச்சிட்டது. நிஜத்தில் முகப்பரு இல்லாத நிலையில் படத்தில் மட்டும் எப்படி முகப்பரு தெரிகிறது? செயற்கை முகப் பருக்கள் ஒட்டி காட்சி படமாக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளனர். படதரப்பில் கூறும்போது, ‘இயற்கையான முகப்பருவுடன்தான் சாய் பல்லவி படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் லேசர் தொழில் நுட்பம் மூலம் அவற்றை அகற்றியிருக்கலாம்’ என்றனர்.

Join our channel google news Youtube