பழைய கார்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு!!!

பழைய கார்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு!!!

Default Image
உபயோகித்த பொருட்கள் வாங்கும் போதோ விற்கும் போதோ, வாங்கிய விலையை விட விற்கும் விலை குறைவு என்றால் ஜி எஸ் டி செலுத்த தேவை இல்லை என அரசு தற்போதுதான் அறிவித்துள்ளது.
உபயோகித்த பொருட்கள் (செகண்ட் ஹாண்ட்) வாங்கி விற்கும் பலருக்கும் தங்கள் பொருட்களுக்கு ஜி எஸ் டி விதிக்க வேண்டுமா என்னும் சந்தேகம் இருந்தது. இது குறித்து பலரும் அரசிடம் விளக்கம் கேட்டனர். ஜி எஸ் டி அமுலாகி மூன்று வாரம் ஆகும் நிலையில் தற்போது அதற்கு விடையளித்த அரசு, வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் வித்தியாசம் இல்லை என்றாலோ, குறைவாக இருந்தாலோ ஜி எஸ் டி செலுத்த தேவை இல்லை எனக் கூறி உள்ளது.
உபயோகப்படுத்திய பொருட்கள் வாங்கி, அவற்றில் ஏதும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு விற்கும் போது, முதலில் ஏதும் வரி செலுத்தப்படாவிட்டால், விற்கும் விலைக்கும் வாங்கிய விலைக்கும் உள்ள வித்தியாசத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. இரு விலைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்றாலும் விற்கும் விலை குறைவாக இருந்தாலும் வரி செலுத்த தேவை இல்லை.
ஜிஎஸ்டி விதி எண் 32(5)ன் படி உபயோகப்படுத்திய கார், மொபைல், டெலிவிஷன்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பதிவு செய்யப்படாத விற்பனையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி, விற்பனை செய்யலாம். ஜிஎஸ்டி யில் இருந்து பதிவு செய்யப்பட்ட செகண்ட் ஹேண்ட் பொருட்கள் விற்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் ஜி எஸ் டி செலுத்தத் தேவை இல்லை.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்கும் போது ஜிஎஸ்டி விதிக்கவும் கூடாது, அதை கிரெடிட்டில் எடுத்துக் கொள்ளவும் கூடாது, ஏனெனில் எந்த பொருளுக்கும் பலமுறை வரி செலுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என கூறி உள்ளது
Join our channel google news Youtube