குட்கா ஊழல் ஒன்றே அதிமுக அரசை கவிழ்த்துவிடும்:திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் ஒன்றே அதிமுக அரசை கவிழ்த்துவிடும்:திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image
சென்னை:நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி  சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
மாணவர்களின் எதிர்காலத்தை எந்தளவுக்கு குட்டிச்சுவராக்க வேண்டுமோ, எவ்வளவு பாழடிக்க முடியுமோ, அதற்கு துணை நிற்கும் ஆட்சியாக இந்த குதிரை பேர ஆட்சி நடக்கிறது என தெரிவித்தார். 
எடப்பாடி பழனிசாமி அரசை திமுக கவிழ்த்து விடும் என்று தமிழக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், ஆனால், குட்கா ஊழல் ஒன்றே அதிமுக அரசை கவிழ்த்துவிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube