புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு- பொது மக்களை தள்ளிவிட்ட போலீஸ்!

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள தருவைகுளம் சமத்துவபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
இதையடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கடையை தள்ளியே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 
மோதல் சம்பவம் குறித்து அறிந்த தாசில்தார் நம்பிராயர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment