எரிவாயு சிலண்டருக்கான மானிய ரத்து…கொதித்தெழுந்தது இந்தியா…பின்வாங்கியது..மத்திய அரசு

எரிவாயு சிலண்டருக்கான மானிய ரத்து…கொதித்தெழுந்தது இந்தியா…பின்வாங்கியது..மத்திய அரசு

Default Image
டெல்லி:எரிவாயு சிலண்டருக்கான மானியம் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலண்டர்களுக்கு மானியம் இல்லாமல், முழு பணம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர், எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். 
அதற்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டது செல்லாது என தெரிவித்தார். மேலும், சிலிண்டருக்கான மனியம் சீரமைக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்துக்காக நாடாளுமன்ற அவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்துவது சரியான நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சியினரிடம் அவர் தெரிவித்தார்.
Join our channel google news Youtube