மகள் காதல் திருமணம் செய்தால் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை…!

சேலம்: சேலம் வாழப்பாடி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் மொத்தக் குடும்பமும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ளது தாண்டானூர். இங்கு வசித்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் மகன். இதில் மூத்த மகள் மோகனா, ஆடிப்பெருக்கு தினத்தன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி இருவரும் மனமுடைந்தனர். மேலும், மகளின் கதல் திருமணத்தால் அவமானம் அடைந்ததாக கூறிவந்துள்ளனர். இந்நிலையில், ராஜேந்திரனும், அவரது மனைவி ராணியும், மகன் நவீன் மற்றும் மற்றொரு மகள் ஆர்த்தி ஆகியோருக்கு விஷம் கொடுத்து, தாங்களும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.
காதல் திருமணத்தால் குடும்பத்தில் இருந்த நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment