ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்:விஜயகாந்த்

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்:விஜயகாந்த்

Default Image
ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜயகாந்த், “நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் ஒருமுறை, ஒரே நேரத்தில் அரசியல் திரைப்படம் என்று இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்வது இயலாத காரியம் என்று தெரிவித்தார். ஆகவே அவர் அரசியலுக்கு நிச்சயமாக வரமாட்டார்.
நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வரமாட்டார்” என்றும், “அதே நேரம் லஞ்சம் குறித்து கமல் குரல்கொடுப்பது தவறில்லை” என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், “தற்போதைய அ.தி.மு.க அரசு ஊழல் செய்வதிலும், பதவியை காப்பாற்றிக்கொள்வதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தவில்லை” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
Join our channel google news Youtube