சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பூஜை நேரம் மாற்றம்..!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பூஜை நேரம் மாற்றம்..!

Default Image

     சந்திர கிரகணம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10:50 மணி முதல் நள்ளிரவு 12:44 மணி வரை நடக்கிறது. எனவே கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 05:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 04:00 மணிக்கு சாயரக்ஷை தீப ஆராதனை, 05:00 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, ராக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இரவு 08:00 மணிக்கு பள்ளியறை தீப ஆராதனையும், அதைத்தொடர்ந்து நடை திருக்காப்பிடுதலும் நடைபெறுகிறது. பின்பு இரவு 09:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 09:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது, பின்னர் சுவாமி மீது பட்டு சத்தப்பட்டு நடை திருக்காப்பிடப்படுகிறது. பின்னர் அதிகாலை 03:00 மணிக்கு புண்ணியாகவாசனம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றகால பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி தெரிவித்தார்.

Join our channel google news Youtube