கிரேக்க தீவுகளில் நிலநடுக்கம் இருவர் பலி!!

கிரேக்க தீவுகளில் நிலநடுக்கம் இருவர் பலி!!

Default Image

கிரேக்க தீவுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளியாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் இருவர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் குறித்து கோஸ் தீவின் மேயர் ஜியார்கோஸ் கிரிஸ்டிஸ் அளித்த பேட்டியில், ”பழைய கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல வீடுகள், கடைகள் விரிசல் கண்டுள்ளன. 

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தேடுதல் பணியில் மீட்புப் படையினரும் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். தீவின் பழமையான கோட்டை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது”

Join our channel google news Youtube