குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது மேலும் ஒரு வழக்கு…!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது மேலும் ஒரு வழக்கு…!

Default Image
சேலம்:சேலத்தில் குண்டர் சட்டம் பாய்ந்த மாணவி வளர்மதியை மீது மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டு காவலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வீராணம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகள் வளர்மதி (23). கடந்த மாதம் 12-ஆம் தேதி வளர்மதி சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி முன்பு நின்றுக் கொண்டு, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிக்கொண்டு இருந்தார்.
இதனையடுத்து கன்னங்குறிச்சி காவலாளர்கள் வளர்மதியை கைது செய்து கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.
கைதான வளர்மதி மீது ஏற்கனவே அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக கூறி கரூர் மாவட்டம் குளித்தலை, கோவை, சிதம்பரம், சேலம் பள்ளப்பட்டி, சேலம் நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இதனைத் தொடர்ந்து மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தமிழக காவல்துறை, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருக்கும் மாணவி வளர்மதியை மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் அரிசிபாளையம் பாவேந்தர் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய நபரை விடுவிப்பது தொடர்பாகவும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வளர்மதி உள்பட பலர் சேலம் நான்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வளர்மதி மீது பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பள்ளப்பட்டி காவலாளர்கள் சாலைமறியல் தொடர்பான வழக்கில் வளர்மதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.
Join our channel google news Youtube