சேலத்தில் சுகாதார வளாகம் குப்பை கிடங்கானது வாலிபர் சங்கத்தினர் போராட்டம்…!

சேலம் மாநகர் செல்லக்குட்டிகாடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நவீன சுகாதார வளாகம் உள்ளது.இங்கு பெயரில் மட்டும்தான் சுகாதாரம் உள்ளதே தவிர இந்த பகுதிகளில் சுகாதாரம் அரவே இல்லை.
1.மழைபோல் குப்பைகள் தேக்கம்.
2.பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லை.
3.அங்காங்கே கழிவுநீர்,மழைநீர் தேங்கியுள்ளது.

இதனை சரிசெய்ய பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி_ஊழியர்களோ_அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. எனவே டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள மாநகராட்சியை கண்டித்து இன்று 7.10.17 காலை 9.30மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்( DYFI) சேலம் கிழக்கு மாநகர நிர்வாகிகள் அப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது சுகாதாரமான முறையில் இப்பகுதியினை வைத்திட பணியாற்றுகிறோம் என்று உறுதியளித்ததோடு உடனடியாக குப்பை கழிவுகள் அப்புறப்படுத்தும் பணிசெய்ய துவங்கினர். இதனால் DYFI போராட்டம் முடிவுக்குவந்தது.
இதில் மாநகர செயலாளர் V.பெரியசாமி, நிர்வாகிகள் வடிவேல், பிரபாகர் மற்றும் 50க்கும்மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment