தமிழகத்திலும் காதலர்களை குறிவைக்கும் ஜாதிவெறி கலாச்சார குண்டர்கள்

தமிழகத்திலும் காதலர்களை குறிவைக்கும் ஜாதிவெறி கலாச்சார குண்டர்கள்

Default Image
தமிழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடி வண்டியில் அமர்ந்திருந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் நின்று பேசிக்கொண்டிருக்க அவர்களை மறித்த இரண்டு இளைஞர்கள் சரமாரியாக பயமுறுத்தும் தொனியில் அவர்களை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துகிறார்கள்.  அதாவது, எந்த ஊர் நீ? என்று அவர்கள் கேட்க, அந்த இளைஞர் ஒரு இடத்தின் பெயரை சொல்கிறார். சரியாக வீடியோவில் அது கேட்கவில்லை. பின்னர் தெளிவா சொல்லு என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, அந்த இளைஞன் ‘புதூர் காலனி’ என்கிறார். அந்த பையன் வசிக்கும் இடத்தை வைத்து, இன்ன சாதி என்று அறிந்துகொள்வதற்காக எழுப்பப்பட்ட கேள்விகள் இவை. மேலும் அந்த இளைஞனின் வண்டியில் ஒரு கட்சியின் அடையாளம் வேறு இருக்கிறது. பின்னர் இந்த பொண்ணு யாரு? நீ இங்க என்ன செய்ற? உன்ன அடிக்கடி இந்த பக்கம் பாத்துட்ருக்கேன்…” போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே அவர்களை வீடியோ எடுக்கின்றனர்.
அதை கண்ட பையன், “அண்ணா அண்ணா ப்ளீஸ் ணா… வீடியோலாம் எடுக்காதிங்கனா என்று முகத்தினை மூடிக்கொண்டு கெஞ்சுகிறான்…. அந்த மாணவி அவன் தோளில் சாய்ந்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள்… அண்ணா அந்த பொண்ணு லைஃப் இது… நாங்க தப்பான எண்ணத்தோடலாம் இங்க வரலண்ணா… லவ்வர்ஸ்ணா… கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுணா” என கெஞ்ச அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டே, நாங்க இத யாருக்கு அனுப்ப போறோம்… அந்த பொண்ணோட அம்மா அப்பா யார்னு கூட எங்களுக்கு தெரியாது என்று கூறுகின்றனர்.
பின்னர்  இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  “ உங்களையெல்லாம் படிக்கதான் அனுப்பினார்களா? இப்படி சாதி கேட்டு திரிகிறீர்களே? என்று எழுதி மாணவியின் நடத்தையை விமர்சிக்கும் வகையில் பரவவிட்டுள்ளார். அதனை பல்லாயிரக்கணக்கோர் பார்த்து கடும் விமர்சனம் செய்த நிலையில் அந்த பதிவு சில மணிநேரங்களில் நீக்கப்பட்டது. அது பலராலும் பகிரப்பட்டு வைரலானது.
Join our channel google news Youtube