பிறந்தவுடன் தாயை கட்டியணைத்து முத்தமிட்ட குழந்தை.. நெகிழ்ச்சியான தருணம்

பிறந்தவுடன் தாயை கட்டியணைத்து முத்தமிட்ட குழந்தை.. நெகிழ்ச்சியான தருணம்

Default Image

ரியோடி ஜெனிரோ: அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை, சிறிது நேரத்தில் தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டது அங்கிருந்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேசிலை சேர்ந்தவர் பிரெண்டா கோயலோ டி சோசா (24). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி சாண்டா மோனிகா மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த பெண் குழந்தை தனது தாயை சில வினாடிகளுக்கு கட்டியணைத்து முத்தமிட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தாய்க்கும், குழந்தைக்கும் இருந்த பாச பிணைப்பை அனைவரும் மெச்சுகின்றனர்.
இதுகுறித்து டிசோசா கூறுகையில், என்னுடன் அவள் இந்த அளவுக்கு அன்பாக இருப்பாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளுக்கு அகாதா ரிபேரோ கோயலோ என பெயர் சூட்டியுள்ளோம். தற்போது 3 மாதங்களாகிறது. மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்றார் டிசோசா.

Join our channel google news Youtube