நீட்டா அம்பானியின் மொபைல் இதுவா? ஓர் அதிர்ச்சி தகவல்..!

நீட்டா அம்பானியின் மொபைல் இதுவா? ஓர் அதிர்ச்சி தகவல்..!

Default Image
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, இவருடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது, இந்தியாவில் இப்போது அதிக அளவு மக்கள் ஜியோ சிம் மற்றும் ஜியோ போனை பயன்படுத்துகின்றனர். 
முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி பயன்படுத்தும் செல்போனை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இவர் பயன்படுத்தும் இந்த செல்போன் மிக அதிகவிலை கொண்டதாக உள்ளது.
நீட்டா அம்பானி அவர்கள் ரூ.315 கோடி மதிப்பில் ஐபோன் 6 பிங்க் என்ற செல்போனை பயன்படுத்துகிறார் என இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 48.5 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஐபோன் 6 பிங்க் செல்போனை வாங்கியுள்ளார்.
இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் பொறுத்தவரை 24 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் உடைக்க முடியாத வண்ணம் இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் உள்ளது.
இந்த மொபைல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற செல்போனை நீட்டா அம்பானி அவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என இணையத்தில் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஐபோன் 6 பிங்க் மொபைல் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின்பேரில் மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளது.

Join our channel google news Youtube