பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் சுந்தர் சிங்

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் சுந்தர் சிங்

Default Image

லண்டன்: பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் குர்ஜார் 60.36 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் 2017 பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பத்ககம் பெற்று தந்தவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். தங்கம் வென்றது குறித்துப் பேசிய சுந்தர் சிங், “ரியோ ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையான பயிற்சி பெற்றிருந்தேன். ஆனால் விதிமுறை பிரச்னை காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. அதனால் மிகவும் பாதிக்கப்பட்டேன். 
இப்போது உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இனி வரும் காலங்களில் நான் சிறப்பாக செயல்பட இந்த தங்கப் பதக்கம் உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

Join our channel google news Youtube