மெர்சல் மற்றும் மதுரவீரன் படங்களுக்கு என்ன ஒற்றுமை?

மெர்சல் மற்றும் மதுரவீரன் படங்களுக்கு என்ன ஒற்றுமை?

Default Image

விஜயகாந்தின் இளைய மகனான ஷண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
சகாப்தம் படம் தோல்வியடைந்தது மட்டுமல்ல, சமூகவலைத்தளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் சண்முகப்பாண்டியன்.
எனவே அவர் சினிமாவைவிட்டு விலகிச் சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், ‘மதுரவீரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் ‘மதுரவீரன்’. எனவே பெரும்பாலான காட்சிகளை மதுரை பின்னணியிலேயே எடுத்திருக்கிறார்கள்.
விஜய் நடித்து வரும் மெர்சல் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அந்தப் பட்டியலில் தற்போது மதரவீரன் படமும் சேர்ந்துள்ளது.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் சண்முகபாண்டியனுடன் கதாநாயகியாக புதுமுகம் மீனாட்சி நடிக்கிறார்.
இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், பாலசரவணன், ‘நான் கடவுள் ராஜேந்திரன்’ ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான பாடல்களை யுகபாரதி எழுத, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.
Join our channel google news Youtube