திருச்செந்தூரில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் மீண்டும் குளறுபடி: பணிகள் நிறுத்தம்

தூத்துக்குடி:திருச்செந்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி உணவு வழங்கல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமானது ஒன்றிய தலைவர் (DYFI) கதிர்வேல் THALAIMAIYIL நடைபெற்றது.

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.புழக்கத்தில் உள்ள மின்னணு அட்டைகளில் பிழைகளைத் திருத்தவும், புதிதாக வழங்கப்படவுள்ள அட்டைகள் சரியானமுறையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆதார்விவரங்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்தும்,கூடுதல் விவரங்களைகுடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெற்றும்மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வாரத்துக்கு தலா 100 மின்னணு குடும்ப அட்டைகள் வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்த அட்டைகளில் பிழைகள் அதிகளவு இருப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்கள் அதில் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

வீடுகளில் இணையதள இணைப்பு வைத்திருப்போர் அதன் மூலமாகவும், இணைப்பு இல்லாதோர் அரசு இணைய சேவை மையங்களுக்கும் சென்று திருத்தப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.இந்நிலையில், மின்னணு குடும்ப அட்டைகள் பிழைகள் ஏதும் இல்லாமல் 100 சதவீதம் சரியான முறையில் வழங்குவதற்காக அந்த அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.36 கோடி பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கத் தயார் நிலையில் உள்ளன.சுமார் 25 லட்சம் பேரிடம் இருந்து புகைப்படம் உள்ளிட்ட விஷயங்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே,முழுமையான விவரங்களைப் பெற்று அட்டைகள் அளிக்கப்படும் என்றனர்.
 இந்த ஆர்பாட்டத்தில் நந்தகுமார் மாவட்டபொருளாளர்(DYFI),முத்து மாவட்டசெயலாளர்(DYFI),நாகராஜன்,முத்துகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர்

author avatar
Castro Murugan

Leave a Comment