தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா அறிக்கை

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா அறிக்கை

Default Image

வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்கா தனது அறிக்கையில் கூறியுள்ளது.காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பார்லிமென்டில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான 2016-ம் ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல்செய்தது. அதில் லஷ்கரே தொய்பா, ஜெயிஷ்- இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில்இருந்து தான் உருவாகின்றன. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் இந்தியாவிற்கு எதிரான நாசவேலைகளை செய்கின்றன. இதில் கடந்த ஆண்டு ஜனவரியில் பதன்கோட் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான்கள், தெஹரிக் இ தாலிபான், ஹக்கானி நெட் ஒர்க் போன்ற அமைப்புகளும் பாக். மண்ணில் இருந்து தான் உருவாகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் போதிய அளவிற்கு நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் தயங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ஹபீஸ் சையத்தின் ஜமேத் -உத் தாவா அமைப்பை மட்டும் சேர்க்க பாகிஸ்தான் மறுத்துவிட்டதன் மூலம் பயங்கரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube