ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கம்…!

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கம்…!

Default Image

வாஷிங்டன்: ரஷ்யா மீதான பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிறகு அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட்டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றார். இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பெருமளவு இருந்ததாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டது. மேலும் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்க ரஷ்யா உளவுத்துறையினர், ரஷ்ய தூதரக அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மின்னஞ்சல் தகவல்கள் திருடினர் என குற்றம்சாட்டப்பட்டது. அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறை திரைமறைவு வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து அமெரிக்காவின் மேல்சபையான செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க பார்லி.யில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டெனால்ட்டிரம்ப் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

Join our channel google news Youtube