இன்று அனைத்து கட்சி கூட்டம்: சீன விவகாரம், காஷ்மீர் நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை

இன்று அனைத்து கட்சி கூட்டம்: சீன விவகாரம், காஷ்மீர் நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை

Default Image

புதுடெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று அனைத்து கட்சி கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளனர். சிக்கிம் மாநில எல்லையில், பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய இராணுவ  வீரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், அங்கு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் சீன எல்லை ஆக்கிரமிக்க முயன்ற  விவகாரம் மற்றும் காஷ்மீர் நிலைமை குறித்து ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கி கூற உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube