அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு…!டி.டி.வி.தினகரன்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு…!டி.டி.வி.தினகரன்

Default Image

சென்னை:அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வரும் 14ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயண திட்டத்தை அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், சேலஞ்சர் துரை, முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.ஆதித்தன், சாருபாலா தொண்டைமான், காமராஜ், மாணிக்கராஜா, டி.கே.எம்.சின்னையா, கே.டி.பச்சைமால், ஜி.செந்தமிழன், ஆர்.மனோகரன். எஸ்.டி.ஜக்கையன், மேலூர் ஆர்.சாமி, சி.சன்முகவேலு, மாதவரம் மூர்த்தி, செந்தில் பாலாஜி, கு.ப. கிருஷ்ணன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக கே.கே.சிவசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரிவு இணைசெயலாளர்களாக தங்கதுரை, திருப்பூர் சிவசாமி, கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இணைச்செயலாளர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், சுகுமார் பாபு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Join our channel google news Youtube