போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கும் ஜியோ வோடபோன்

போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கும் ஜியோ வோடபோன்

Default Image

வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், மேலும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகபடுத்தும் நோக்கத்தில் புதிய  திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது அது குறித்து விபரங்கள் பின் வருமாறு,

வோடபோன் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ 177 க்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு மட்டும், மேலும் 496 க்கு 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகிறது.
இது இரண்டும் முதல் ரீசார்ஜ் ஆகும். இது MNP முறையில் வோடபோனுக்கு மாறிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்

.

அதேபோல் ஜியோ நிறுவனமும் ரூ 459க்கு 84நாட்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி  டேட்டா வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் SMS வசதிகளும்,        ரூ 496க்கு 91நாட்களுக்கு தினமும் 1 ஜிபி ஜி டேட்டா வரம்பற்ற வாய்ஸ் கால், SMS பூஸ்டர் களை வழங்குகிறது. 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube