இராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய பீரங்கிகள் தோல்வி: சீன பீரங்கிகள் வெற்றி

இராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய பீரங்கிகள் தோல்வி: சீன பீரங்கிகள் வெற்றி

Default Image

மாஸ்கோ:இராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டியில் இந்திய ராணுவக் குழு அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ராணுவ பீரங்கி வண்டிகளுக்கான சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய ராணுவ பீரங்கி வண்டிகள், எந்திரக் கோளாறு ஏற்பட்டு சரியாக செயல்பட வில்லை. இதனால் அரையிறுதியில் வெற்றி பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இவை ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவின் டி 90 டாங்குகள் ஆகும்.
அதே நேரம் இந்த போட்டியில் சீன ராணுவ பீரங்கி வாகனங்கள் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதியில் வென்றன. இதையடுத்து அவை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.
சீனாவுடன் எல்லைப்பிரச்னை ஏற்பட்டு, போர் மூளுமோ என்ற அச்சமான சூழல் எழுந்துள்ள நிலையில் இந்திய டாங்குகள் அரையிறுதியில் கூட வெற்றி பெறாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube