திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டித்து நேற்று திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அனைத்து அரசியல் கட்சி , இயக்கம், விவசாய சங்கங்கள் , சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தை நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி M.S .ராஜா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள் .

கூட்டத்துக்கு முன்னதாக தாமிரபரணி பாதுகாவலர் ஐயா நயினார் குலசேகரன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தின் முடிவில ்பல முறை மக்கள் புகார் கொடுத்தாலும்  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் நிலத்தடி நீர் திருட்டை கண்டும் காணாமலும்  இருக்கும் மாவட்ட ஆட்சியரை  கண்டித்து  முற்றுகை போராட்டம் செய்வது என முடிவு செய்து உள்ளோம் .

Leave a Comment