மால்வேர்களால் அதிகமான பிராட்பேண்ட் மோடம்கள் பாதிப்பு!-பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு!!

மால்வேர்களால் அதிகமான பிராட்பேண்ட் மோடம்கள் பாதிப்பு!-பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு!!

Default Image
தென்னிந்தியாவில் இதுவரை 60,000 பிஎஸ்என்எல் மோடம்கள் மால்வேர் பாதிப்பினால் சிக்கியுள்ளது, மேலும் ஐதராபாத் பிஎஸ்என்எல் சார்ந்த அதிகாரிகள் 45சதவிகிதம் மால்வேர் பாதிப்பினால் இன்டர்நெட் வசதி செயல்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை 040-23231504 என்ற எண்ணிறக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கமுடியும், மேலும் இந்த சேவை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மால்வேர் தாக்குதல் விரைவில் சரிசெய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் தலைவர் ஸ்ரீவாஸ்தவா பிடிஐ தகவல் தெரிவித்தார்.
கடந்த மாதம் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்கள், பெயர்கள் மற்றும் ஆதார் எண்கள் உள்ளிட்ட அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டன. தற்போது பிஎஸ்என்எல் சேவையில் 60,000 மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மால்வேர் பாதிப்பு கர்நாடகா மாநிலத்தில் அதிகமாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, மேலும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவை மையங்களுக்கு சென்று தங்களது புகார்களை கூறமுடியும்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது மோடம் தளத்திற்க்கு சென்று ரீபூட் செய்யமுடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Join our channel google news Youtube