சின்னம்மா மாட்டிக்கிச்சு……. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகை.. உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு

By

பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகை காட்டப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இவருக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சிறைக்குள் கஞ்சா சப்ளை ஜோராக நடப்பதாகவும், பல்வேறு குற்றவாளிகளும் பணத்தை கொடுத்து காரியம் சாதிப்பதாகவும் புகார்களை கூறியுள்ளார் அந்த டிஐஜி.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், பெங்களூர் மத்திய சிறையில் நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் சீரியசானவை. அந்த முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.
விசாரணை வெளியாகும்வரை அனைவரும் தயவு செய்து காத்திருக்கவும். தவறு செய்தது யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023