கோவில்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியினை மீண்டும் துவங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்…

கோவில்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியினை மீண்டும் துவங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்…

Default Image

கோவில்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியினை மீண்டும் துவங்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர் .
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதி நகர் மேட்டு தெரு , சாஸ்திரி நகர் பகுதிகள் மேட்டுப்பகுதிகள் பகுதிகளில் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனை போக்கும் வகையில் பாரதிநகர் மேட்டுத்தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்து அதற்கான ஆரம்ப கட்டபணிகளை தொடங்கியது .
தொட்டி அமைக்க பள்ளம் தோண்ட்டப்பட்ட பிறகு தீடீரென பணிகள் நிறுத்தப்பட்டன . சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன . இந்நிலையில் விரைந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனமான முறையில் போரட்டம் நடத்தினர் , இதில் , தோண்டப்பட்ட பள்ளத்தில் மாலை அணிவித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பின

Join our channel google news Youtube