காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக பாஜக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும்-தமிழக பாஜக தலைவர் தமிழிசை

காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக பாஜக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும்-தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Default Image

திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது.ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கே தெரியவில்லை.திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக பாஜக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube