தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக ஆய்வுக்குழு..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக ஆய்வுக்குழு..!

RNRavi

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குழு, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தீஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் பாஜக ஆய்வுக்குழு!

இந்த குழுவானது தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அந்தவகையில், இந்த குழு நேற்றைய தினம் சென்னை வந்தது. தற்போது இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்திற்கு பாஜக ஆய்வுக்குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதன்பின், 4 பேர்கொண்ட பாஜக ஆய்வுக்குழு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தமிழக  பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பான விரிவான அறிக்கையை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube