வேலூரில் பிரச்சாரம் செய்ய பாஜக தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் – ஓ.பி.எஸ் உறுதி !

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக தேசிய தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக டெல்லியில் இருந்த துணை முதல்வர் பன்னிர்செல்வம் இன்று சென்னை வந்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களை புகார் கொடுப்பதற்காக சந்திக்கவில்லை என்றும்  அமித்சா உட்பட அனைவரையும் மரியாதையை நிமித்தமாக தான்  சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் அவர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.