உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது! அண்ணாமலை திட்டவட்டம்!

Annamalai : உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், இன்று தான் பிரச்சாரத்தின் கடைசி நாள். எனவே, கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது ” எங்களுடைய  உயிரே போனாலும் நீட் தேர்வை மட்டும் ரத்து செய்யவே முடியாது என்று கூறியுள்ளார். கோவையில் பிரச்சாரம் செய்தபோது  அண்ணாமலை மக்கள் கேள்வுக்கும் பதில் அளித்தார். அப்போது ஒரு பெண்மணி நீட் தேர்வை ரத்து செய்வீர்களா? என்பது போல கேள்வியை கேட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை ” எங்கள் உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு என்பது மக்களுக்கு ரொம்பவே நல்லது. முதன் முதலாக ஏழை மக்கள் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். திமுக 1967 -ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததது ஐந்தே ஐந்து மருத்துவக்கல்லூரி தான். 17 தனியார் மருத்துவக்கல்லூரி தான்.

ஆனால், நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுடைய நோக்கமே ஏழை மக்கள் போட்டி (neet)  தேர்வு மூலமாக சமூக நிதியோட மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டும். நீட் தேர்வை எடுத்துவிட்டு தான் நாங்கள் அரசியலில் இருக்கவேண்டும் என்றால் அப்படிபட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம். எல்லா மக்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின்  குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும். இல்லையென்றால் எங்கே போவீர்கள் டி ஆர் பாலுனுடைய மருத்துவக் கல்லூரி, பாலாஜி மெடிக்கல் காலேஜ், ஆகியவற்றிற்கு செல்வீர்கள் ஒரு கோடி பணம் கொடுத்து எத்தனை பேரால் படிக்க முடியும்? பணம் இருப்பவர்கள் படிப்பார்கள்.

ஏழைத்தாயின்  மகன், மகள் நீட் மூலமாக மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் ஆனால் நீட்டை எந்த காரணத்துக்காகவும் எடுக்க மாட்டோம். மாணவர்களை இறப்புக்கு  தூண்டுகிறார்கள். மாணவர்கள் இறப்பதற்கு ஸ்டாலின் ஐயாவை பிடித்து உள்ளே வைத்தால் எந்த தற்கொலையும் நடைபெறாது. நான் தமிழ்நாட்டில் காவல்துறையில் இருந்தேன் என்றால் உடனடியாக FIR போட்டு முதல்  குற்றவாளியாக முதல்வர் ஸ்டாலினை உள்ளே தள்ளி இருப்பேன்” என்றும் அண்ணாமலை  கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.