தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக BIG BOSS கமல்ஹாசன்

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக BIG BOSS கமல்ஹாசன்

Default Image
ப்ரோ கபடி லீகின் 5ஆவது சீசனுக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்ட் அம்பாஸடராக அறிவித்திருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.
“தனது நிகரில்லாத அனுபவங்களின் மூலம் எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக அவர் திகழ்வார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது இந்த பயணத்தில் அவரும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.”
என்று கமல்ஹாசன் பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் நிம்மகட பிரசாத்,
“பல சவாலான தருணங்களில் கமல்ஹாசனின் தன்னம்பிக்கை மற்றும் தன்னடக்கத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன்.
அவரை தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். ஸ்போர்ட்ஸ் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு அவரது படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தெரிகிறது. நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கலைத்துறையில் பல சாதனைகள் புரிந்தவர்.
வாழ்க்கையின் போராட்டங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் கமல்ஹாசன், கபடி யுத்தகளத்தில் எங்களது வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்.” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தமிழ் தலைவாஸூடன் இணைவதைப்பற்றி கமல்ஹாசன் கூறுகையில்.
“கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்.”
தமிழ் தலைவாஸ் அணியின் ஜர்சி நாளை வெளியிடப்படுகிறது.
Join our channel google news Youtube