3 மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக பிக்பாஸ் சாக்ஷி.! அதுவும் இசையமைப்பாளருக்கு ஜோடியாவாமே .!

பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அடுத்ததாக பிரபல இசையமைப்பாளரான பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .இந்த நிலையில் தற்போது இவர் இசையமைப்பாளருக்கு ஜோடியாக கன்னட படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளவர் பாலாஜி . தற்போது இவர் ஹீரோவாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் நடிக்கவுள்ளார்.திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகும் இந்த படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி ரங்க புவனேஸ்வர் இயக்க உள்ளார்.தமிழ் ,இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை GOOD HOPE pictures சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.விரைவில் படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.