பந்து வீச முடிவு செய்த பெங்களூரு ..! இந்த போட்டியில் வெற்றி யாருக்கு ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், லக்னோ அணியும் மோதவுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் 15-வது போட்டியாக தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பெங்களூரு அணி தற்போது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் என்பதால் டாஸ் வென்ற பெங்களூரு அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த போட்டியில் தோல்வி பெற்று வரும் பெங்களுரு அணி, நடைபெற போகும் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. அதே போல லக்னோ அணியும் வெற்றியை தொடர் வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

பெங்களூரு அணி வீரர்கள் :

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்

லக்னோ அணி வீரர்கள் : 

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), KL ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.