பெய்ஜிங்கில் தலை தூக்கிய கொரோனா.! சோதனை செய்யப்படும் பார்சல்கள்.!

பெய்ஜிங்கில் தலை தூக்கிய கொரோனா.! சோதனை செய்யப்படும் பார்சல்கள்.!

Default Image

சீனாவில் இதுவரை 83,352 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்ட்டுள்ளனர். இதில், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 78,410பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சமீபத்தில், பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தச் சந்தை மூடப்பட்டது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துச் சேவை , பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெய்ஜிங்கில் தினமும் ஒரு நபர் அல்லது இரண்டு நபர்களுக்கு கொரோனா பரவி வருகிறது.

இந்நிலையில், தற்போது உணவுகள் டெலிவரி செய்யப்படும் உணவு மற்றும் பார்சல் எடுத்துக் செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகின்றன. மேலும் உணவுகள் டெலிவரி செய்யும் நபரையும், மற்றும் பார்சல் ஏற்றி செல்பவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

Join our channel google news Youtube