டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..!

டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..!

Virat Kohli

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக உள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை  தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன் ), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன் ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகி இருந்தார்.  மறுபுறம், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

காயங்கள் காரணமாக விசாகப்பட்டியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு உடற்தகுதி பின்னர் தெரிவிக்கும் என பிசிசிஐ தெரிவித்த்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் பிப்ரவரி 15-ம் தேதி அன்று ராஜ்கோட்டிலும், 4-வது டெஸ்ட் பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 07-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

Join our channel google news Youtube