சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காதது இதுக்காக தான்! பயில்வான் சொன்ன பகீர் தகவல்!

சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காதது இதுக்காக தான்! பயில்வான் சொன்ன பகீர் தகவல்!

bayilvan ranganathan

சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு பெரிதளவில் மக்கள் பலரும் வாடைகைக்கு வீடு கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்ற குற்றசாட்டு ஒரு பக்கம் இருக்கிறது. குறிப்பாக பாவா லட்சுமணன் கூட பேட்டி ஒன்றில் நான் சினிமாக்காரன் என்பதனால் எனக்கு வீடு வாடைகைக்கு கொடுக்க கூட யோசித்தார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

இப்படி சினிமாவை சேர்ந்தவர்களுக்கு எதற்காக வீடு வாடைக்குக்கு கொடுக்கமாட்டிக்கிறார்கள் அதற்கான காரணம் என்னவென்பதை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சினிமாக்காரர்களுக்கு எதற்காக வீடு கொடுக்க மாட்டிக்கிறார்கள் தெரியுமா? அதற்கு பெரிய காரணம் இருக்கிறது.

அது என்ன காரணம் என்றால் சினிமாக்காரர்களுக்கு வீடு கொடுத்தால் நம்மளுடைய பெண்ணை காதலித்து விடுவான். அப்படி காதலித்தால் நம்மளுடைய பொண்ணையே சொல்லாமல் கொள்ளாமல் இழுத்துவிட்டு போய்டுவான் குடும்பம் நடத்துவான் என்று பார்த்தால் அதையும் செய்யமாட்டான். இந்த மாதிரி கருத்து கணிப்பு மக்களுக்கு மத்தியில் இருக்கிறது.

பரிதாப செய்தியை காட்டிய இயக்குனர்? உடனடியாக உதவிய விஜயகாந்த்!

எனவே, இதன் காரணமாக தான் மக்கள் சினிமாக்காரர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவே மாட்டிக்கிறார்கள். நானே சொந்த வீடு வாங்கியதற்கு காரணமே இது தான். இப்படியான பிரச்சனைகள் வந்தால் அடிக்கடி வீடு மாறிக்கொண்டே இருக்கவேண்டும். கிட்டத்தட்ட பணம் எல்லாம் கொடுத்து ஒரு வீட்டில் வாழ்கிறோம் என்றால் அந்த வீட்டில் பிரச்சனை வந்தால் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாறிக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கும்.

எனவே, எதற்காக நாம் வீடு மாறவேண்டும் நாமளே சொந்தமாக ஒரு வீட்டை கட்டுவோம் என்று கட்டிவாங்கினேன்.  நான் என்னுடைய மகன் மகள்களை அந்த வீட்டில் வைத்து தான் படிக்க வைத்து வளர்த்தேன். இப்போது அவர்கள் எல்லாம் பெரிய பெரிய வேலைகளுக்கு சென்றுவிட்டார்கள். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் நானே சினிமாக்காரன் என்பதால் எனக்கு பொண்ணும் தரவில்லை வீடும் கொடுக்கவில்லை” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube