பாஜகவில் இணைந்த பாட்ஸா பட நடிகர்…!

அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன்  பாஜகவில் இணைந்தார்.

நடிகர் தேவன் ரஜினியின் பாட்ஷா படம் மற்றும் பல படங்களிலும், மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாகர்கோயிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, பின் கேரளாவிற்கு சென்றார். அங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன்  பாஜகவில் இணைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை வரவேற்று அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் வழங்கி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.