புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கு தடை – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை.

இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் CHRO சுரேஷ் தத் திரிபாதி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடிப்பதற்கும், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். எனவே, ஊழியர்கள் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஏர் இந்தியா ஒரு பொறுப்பான அமைப்பாகும், இந்நிறுவனம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துமீறல்களுக்கு எங்களிடம் சகிப்புத்தன்மை இல்லை, மீறல் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊழியர்களும் டாடா நடத்தை விதிகளின் அடிப்படைக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளனர். சக பணியாளர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment