ஷெரீனை திட்டி தீர்க்கும் பாலாஜியின் ரசிகர்கள்… காரணம் தெரியுமா?

ஷெரீனை திட்டி தீர்க்கும் பாலாஜியின் ரசிகர்கள்… காரணம் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டுக்குள் ஷெரீன் சென்றிருந்த பொழுது, பாலாஜியை அதிகமாக கலாய்த்ததால் தான் பாலாஜியின் ரசிகர்கள் தற்பொழுது காட்டமாக உள்ளனர்.

கடந்த 100 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி தான் டைட்டில் வின்னராக வந்துள்ளார். நேற்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகிய முகேன், கவின் மற்றும் ஷெரீன் சென்றிருந்தனர்.

உள்ளே சென்ற ஷெரீன் பாலாஜியை அதிகமாக காலாய்த்திருந்தார். இதனால் பாலாஜியின் ரசிகர்கள் தற்பொழுது ஷெரீனை அதிகளவில் கேலி செய்து தேவையற்ற வார்த்தைகளாலும் விமர்சித்து வருகின்றனர். இதற்காக பாலாஜியே தனது சமூக வலைதள பக்கத்தில் ஷெரீன் நல்ல தோழி யாரு அவளை தவறாக பேச வேண்டாம் என கூறியிருந்தார். ஆனாலும், இன்னும் பாலாஜியின் ரசிகர்கள் ஓய்ந்தபாடில்லை.

author avatar
Rebekal
Join our channel google news Youtube