இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.?

இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.?

Imran khan - Nawaz Sharif

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை.

நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! 

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருப்பதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் முடக்கப்பட்டது. இதனால் அவர் ஆதரவு வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னத்தில் சுயேட்சையாக நின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்),  பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தலில் பிரதான பங்கு வகித்தன.

இம்ரான் கானின் அவரவு பெற்ற சுயேட்சைகள் 100 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளனர். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. இதனால் கூட்டணி அமைக்க பிரதான கட்சிகள் தீவிர முயற்சித்து வருகின்றன.

இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைக்க தலைவர்கள் பேசி வருகின்றனர். இம்ரான் கான் சிறையில் இருப்பதால் தற்போது அவரது கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை என்பது தீவிரமாக இல்லை என்றே கூறப்படுகிறது . இன்னும் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், பல்வேறு வழக்குகளில் சிறையில்  உள்ள இம்ரான் கானுக்கு ஒரு வழக்கில் இருந்து ஜாமீன் கிடைத்துள்ளது.  கடந்த வருடம் மே 9-ம் தேதி பாகிஸ்தானில் நடந்த தாக்குதல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில், அந்த வழக்கு தொடர்பான அனைவரும் வெளியில் இருப்பதை சுட்டிக்காட்டி இம்ரான் கானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால மற்ற வழக்குகளில் அவர் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் இந்த ஜாமீன் அவருக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

Join our channel google news Youtube