மோசமான வானிலை – டெல்லியில் 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன..!

டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வாகனம் ஓட்டுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், ஆனந்த் விஹார் 388, அசோக் விஹார் 386, லோதி சாலை 349 மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 366 என காற்றின் தரக்குறியீடு காணபப்டுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!

இந்த இன்று காலை மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 7:30 மணி முதல் 10: 30 மணி வரை 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.