லாஸ்லியாவுடன் இணையும் ஆக்சன் கிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் ஆக்சன் கிங். 

கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவருடனும் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.