இந்த காரை வாங்க 6 மாதம் காத்திருக்க வேண்டும்.! விற்பனையில் மைல்கல் தொட்ட Toyota Innova Hycross.!

Toyota Innova Hycross

2022ம் ஆண்டின் இறுதியில், டொயோட்டா இன்னோவா (டொயோட்டாவின் பிரபலமான MPV-யின் மூன்றாம் தலைமுறை கார்) ஹைக்ராஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இரு வருடத்தில் 50,000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது.

இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட Toyota Innova Hycross கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.18.30 லட்சத்தில் இருந்து தொடங்கிய நிலையில், தற்போது உயர்ந்துள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களும் நல்ல மைலேஜ் கொடுக்க கூடியவை.

Read More – இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் நீங்கள் ரூ.10,000 சேமிக்கலாம்..!

இதனாலே, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு முன்பதிவுகள் (Bookings) குவிந்த நிலையில், அதன் காத்திருப்பு காலமும் (Waiting Period) அதிகரித்தது. முதல் இரண்டு மாதங்களிலேயே, முன்னணி நகரங்களில் கூட மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலுக்கான காத்திருப்பு காலம் பல மாதங்களாக உயர்ந்தது.

தற்போதும் காருக்கான முன்பதிவுகள் அதிகமாக இருப்பதால், பெரிய நகரங்களில் கூட குறைந்தது ஆறு மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க வேண்டும் என்றால் முன்பதிவு செய்தபின் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அந்தளவுக்கு அந்த கார் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

ஏனென்றால், டொயோட்டாவின் குறைந்த சேவை செலவு, ஐந்து வருட இலவச சாலையோர உதவி மற்றும் வலுவான-ஹைப்ரிட் அமைப்பின் பேட்டரி பேக்கில் 8-ஆண்டு/1.6 லட்சம் கிமீ உத்தரவாதம் போன்ற அம்சங்கள் இருப்பதால் அந்த கார் அதிக பிரபலத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தான் ஒரு வருடத்தில் 50,000 டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்