நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால் உங்கள் பணத்தைச் சேமிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புனேவைச் சேர்ந்த மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான iVOOMi அனைத்து மாடல்களுக்கும் பம்பர் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது.
இதனால் நீங்கள் iVOOMi நிறுவனத்தின் தள்ளுபடியால் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். iVOOMi எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் JeetX, S1 மற்றும் S1 2.0 மாடல்கள் உள்ளன. இந்த நிறுவனம் JeetX மாடலில் ரூ.10,000 தள்ளுபடி வழங்குகிறது. ஆனால் S தொடரின் மற்ற இரண்டு மாடல்களில் ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
JeetX மாடலில் ரூ.10,000 தள்ளுபடியை வருகின்ற 31 மார்ச் 2024 வரை மட்டுமே பெற முடியும். இந்த மின்சார ஸ்கூட்டர்களின் விலை என்ன மற்றும் இந்த ஸ்கூட்டர்கள் முழு சார்ஜில் எவ்வளவு இயங்கும்,,? என்பதை தெரிவிக்கிறோம்.
iVOOMi JeetX மாடல்:
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்கினால், இந்த ஸ்கூட்டர் இப்போது ரூ.89,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 2kW பேட்டரி உள்ளது. இது 2.5 kW மோட்டாருடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.
iVOOMi S மாடல்:
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.84,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 2.1 kW பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜில் 110 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இது தவிர, S1 2.0 மாடல் ரூ.82,999 விற்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இயங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…