யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..! பைக் பிரியர்கள் அதிர்ச்சி
யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற R1, R1M பைக்குகளின் உற்பத்தியை 2025ம் ஆண்டில் நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யமஹா UK வெளியிட்டுள்ள அறிக்கையில், “யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது.
அதற்குப் பதிலாக எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் பிற தயாரிப்பு உத்திகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு யமஹா பைக் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. R1 மற்றும் R1M பைக்குகள் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியாக பெரிய புதுப்பிப்பைப் பெற்றன.
இந்த காரை வாங்க 6 மாதம் காத்திருக்க வேண்டும்.! விற்பனையில் மைல்கல் தொட்ட Toyota Innova Hycross.!
யமஹா R1 முதன்முதலில் 1997 மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 1998 இல் வெவ்வேறு சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய சந்தைகளில் புகழ்பெற்ற GSX-R1000/GSX-R1000R மாடல் பைக்குகளை இனி விற்பனை செய்வதில்லை என்று சுஸுகி நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.