FASTag ஸ்டிக்கர் ஓட்டவில்லையா.? இரு மடங்கு கட்டண வசூல்.. இன்னும் சில கட்டுபாடுகள்.!
டெல்லி: FASTag கட்டண விதிகளுக்கு உட்படாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், அந்த வாகன பதிவெண் பதிவு செய்யப்பட்டு புகார் எழுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க டோல்கேட் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் கார் முதல் லாரி என 4 சக்கர வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து அதன் மூலம் சாலை பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கட்டண வசூல் மையத்தில் அண்மையில் ஃபாஸ்டேக் (FASTag) செயல்முறையை மத்திய அரசு செயல்படுத்தியது. இந்த ஃபாஸ்டேக் (FASTag) செயல்முறையானது ப்ரீபெய்டு சிம் கார்டு போல செயல்படும். இந்த ஃபாஸ்டேக் (FASTag) வாகன பயனர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதற்கான பட்டை (பார் கோடு) வாகனத்தின் கண்ணடி முன்பக்கம் சிறியதாக ஒட்டப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் டோல்கேட் வந்தவுடன் அந்த பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து நேரடியாக டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்படும்.
நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் உள்ளது. இதன் மூலம் 45,000 கி.மீகும் நீளமான தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்டுகின்றன. இந்த கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI) தனியார் ஒப்பந்ததாரர் முறைப்படி வசூல் செய்கிறது.
தற்போதும் சில வாகனங்கள் FASTag செயல்பாட்டை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றன. அவர்களை தடுக்கும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, FASTag ஸ்டிக்கர் ஒட்டாமல் டோல்கேட் நுழைந்தால் அந்த வாகனத்திற்கு வழக்கமான சுங்க கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், FASTag ஒட்டாத வாகனங்களின் பதிவு எண் (விஆர்என்) உடன் சிசிடிவி காட்சிகள் கொண்டு சேகரிக்கப்பட்டு, ஃபாஸ்டேக் (FASTag) புகார்கள் பதிவு செய்யப்படும் என்றும், மேலும் அவர்கள் மின்னணு கட்டண வசதி வாயிலாக டோல்கேட் இருமடங்கு கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், அடுத்து அந்த வாகனம் வேறு டோல்கேட் வழியாக செல்வதை தடுக்கும் வகையில், அந்த வாகன எண், டோல்கேட் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.