இந்தியாவில் பசுமை சேவையில் களமிறங்கும் Uber… இனி மின்சார கார்கள் தான்.!

Published by
Muthu Kumar

உபெர் நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் உபெர் பசுமை சேவையை தொடங்கவுள்ளது.

பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் அதனால் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு பேருந்து, கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பொதுப்போக்குவரத்தான பேருந்துகளில் பயணித்தாலும், பெரும்பாலானோர் சொந்தமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உபயோகிக்கின்றனர்.

நவீனமயமாதலின் அடுத்தபடியாக சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், எரிபொருள் உபயோக வாகனங்களிலிருந்து அதனைக் குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களின் மீது மக்களின் பார்வை விழத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு பிரபல கார் டாக்ஸி செயலி நிறுவனமான உபெர் (Uber), இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு போன்ற காரணங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பசுமை சேவையில் களமிறங்க உள்ளது. இதன்படி எலக்ட்ரிக் உபெர் (All Electric Uber Green Service) பசுமை சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளது.

Uber Green India [Image- Twitter/@UberIndia]

இதற்காக உபெர் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மின்சார வாகன(EV) தயாரிப்பாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் Uber நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 மின்சார கார்களை உபெரின் கீழ் கொண்டுவரும் நோக்கில் லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ், எவரெஸ்ட் ஃப்ளீட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மூவ் ஆகிய நிறுவனங்களுடன் தனது கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Uber Green Electric [Image- Twitter/@UberIndia]

உபெர் நிறுவனம் SIDBI வங்கியுடன் இணைந்து மின்சார வாகனங்களில் 1000 கோடி நிதியை முதலீடு செய்கிறது. உபெர் மின்சார வாகனங்களை வேகமாக சார்ஜ் செய்வதற்கு சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு GMR Green Energy உடன் இணைந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Uber_BP_Charge {image- Electrive]

உபெர் நிறுவனம் இந்தியாவில் உபெர் பசுமை(Uber Green) சேவையை வரும் ஜூன் மாதம் முதல் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் தொடங்குகிறது. Uber Green மூலம் பயனர்களும் எரிபொருள் வாகனங்களை விட மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் 15 நாடுகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் பசுமை வாகன பயணங்களுக்கு(Ride) பரவலாகக் கிடைக்கக்கூடிய சேவையாக உபெர் பசுமை(Uber Green) பயனளித்து வருகிறது. உபெர் கிரீன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நிறுவனம், அதன் பசுமை இலக்கை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Uber Ind Elcet [Image – Reuters]

மார்க்கெட்டுகளின் சந்தையில் இந்தியா Uber-க்கான மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இதனால் இந்தியாவில் Uber மேலும் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளது. உலகளவில், 70 நாடுகள் மற்றும் 10,000 நகரங்களில் Uber சேவை கிடைக்கிறது. உபெர் பசுமையின் இலக்காக 2030 ஆம் ஆண்டுக்குள்  ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மற்றும் 2040 ஆம் ஆண்டுக்குள்  உலக அளவில் பசுமை இயக்க தளமாக(Platform) உபெர் நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

6 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

7 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

9 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

10 hours ago